ஜூனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!!

ஜூனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் புதிய திரைப்படம்  பூஜையுடன்  துவங்கியது!!

Third Eye Creations  சார்பில் MD விஜய் தயாரிப்பில்,  கிரிஷா குரூப் ஜீனியர் எம்.ஜி.ஆர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, இயக்குநர் தமிழ் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம்,  “Production No. #2” இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது.

எம்.ஜி.ஆரின் தோட்டமான சென்னை ராமவரம் தோட்டத்தில்  படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் ஜீனியர் எம்.ஜி.ஆர், நடிகர் ஆனந்த்பாபு, இயக்குநர் மோகன் ஜி, சந்தோஷ் பிரதாப், விஜய் டிவி புகழ், உதயா, சிலுமிசம் சிவா, வையாபுரி,  இயக்குநர் தமிழ்,  பிக்பாஸ் டேனியல்  ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் கிரிஷா குரூப் நாயகியாக நடிக்கிறார் அறிமுக இயக்குநர்  தமிழ் தியாகராஜன் இயக்குகிறார். முக்கிய வேடத்தில் ஜீனியர் எம்.ஜி.ஆர் நடிக்கிறார்.

புதுமையான க்ரைம் திரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தில்  ஆனந்த்பாபு, உதயா ரவி, சிலிமிசம் சிவா, ஹிட்லர், காதல் சுகுமார், சானா கான் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

தொழில் நுட்ப குழு விபரம்

தயாரிப்பு நிறுவனம் : Third Eye Creations

தயாரிப்பாளர் : MD விஜய்

ஒளிப்பதிவு : சரவணன் ஶ்ரீ

எடிட்டர் : MD விஜய்

திரைக்கதை & வசனம் : MD ஆனந்த்

கதை & இயக்கம் : தமிழ் தியாகராஜன்

மக்கள் தொடர்பு :  மணவை புவன்

படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த விபரம் மற்றும் படம் குறித்த தகவல்கள் விரைவில் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்