காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் ...!

திண்டுக்கல் மாவட்டத்தில் குற்ற வழக்குகள் மூலம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 102 CrPC-ன்படி பதிவு செய்யப்பட்டதில் மொத்தம் 290 வாகனங்கள் உள்ளது.அதில், 2 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 286 இரண்டு சக்கரவாகனங்கள் உள்ளன.
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் மூலம் கைப்பற்றப்பட்டதில் மொத்தம் 30 வாகனங்கள் உள்ளது.அதில், 5 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம் மற்றும் 24 இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளன.
கழிவு செய்யப்பட்டுள்ள காவல்துறை வாகனங்கள் மொத்தம் 11. அதில், 7 நான்கு சக்கர வாகனங்கள், 4 இரண்டு சக்கர வாகனங்கள் என ஆக மொத்தம் 331 வாகனங்களை இன்று திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படுகிறது.
வாகனங்களை ஏலத்தில் எடுக்க விரும்புவோர் இரண்டு சக்கர வாகனங்களுக்கு முன் வைப்புத் தொகையாக 1000 ரூபாயும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 5000 ரூபாயும் செலுத்தி ரசீது பெற வேண்டும்.பின்னர் இன்று நடைபெறும் ஏலத்தில் பங்கேற்கலாம் என காவல்துறை தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுப்பதற்காக திண்டுக்கல், கரூர், திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இந்த பொது ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே