அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன:இபிஎஸ்..!

அதிமுக சார்பில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், அதிமுக அரசு கொண்டுவந்த வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக இடைக்கால பொது செயலாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக கைவிடுகிறது திமுக அரசு. இந்த ஆட்சியில் கோவை மட்டும் இல்லை தமிழகத்திற்கும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
ஒரு ஆட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு திமுகவே உதாரணம். ஒரு கம்பெனியை போன்று செயல்படுகிறது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி தமிழகத்தின் பொற்காலமாக இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எனது தலைமையிலான அரசு சிறப்பாக ஆட்சி செய்தது.ஏராளமான நலத்திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினோம்.
மக்கள் மேம்பாட்டிற்காக அதிமுகவை தொடங்கினார் எம்.ஜி.ஆர், கட்சியை வளர்த்தவர் ஜெயலலிதா. மக்கள் நலனுக்காகவே உழைத்து மறைந்ததனர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என்று தெரிவித்தார்.
கோவை மாநகருக்கு மட்டும் பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.கோவைக்கு மட்டும் 28 தடுப்பணைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பிரமாண்ட திட்டங்கள் திமுகவிற்கு தெரியவில்லை.
விவசாயிகளின் நீண்ட கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியது அதிமுக. நாங்கள் கொண்டுவந்த திட்டங்களுக்கு ரிப்பன்வெட்டி உரிமை கொண்டாடும் திமுக அரசு என்று குற்றம்சாட்டினார்.
கோவை மாநகரில் உள்ள பல்வேறு பிரமாண்ட பாலங்கள் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டன.அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டது திமுக அரசு என்று குற்றம்சாட்டினார்.
மேலும், அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை மக்கள் நலன் கருதி திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்.கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசு.கோவை மேற்கு புறவழிச்சாலை பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை