இலங்கையில் ‘சூர்யா 42’ படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டம் !

இலங்கையில் ‘சூர்யா 42’ படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டம் !

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவா மற்றும் சென்னையில் நடந்து முடிந்தது.இதில் ஒரு பாடலும் கோவாவில் ஷீட்டிங் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் உள்ள வனப்பகுதியில்  நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் ஆயிர வருடங்களுக்கு முன் நடந்த ஒரு பழமையான கதையை மையமாக வைத்து எடுத்துக்கப்படுக்கிறது.

அறுபது நாட்கள் நடக்கும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் 2023-க்குள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் அதோடு நடிகர் சூர்யா 5 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் 10 மொழிகளில் 3டி பீரியடிக் டிராமாவாக உருவாகி இரண்டு பாகங்களாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்