’வாழை’ படத்தின் கதை குறித்து மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட்...அப்படி என்ன கதையா இருக்கும் ?

’வாழை’ படத்தின் கதை குறித்து மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட்...அப்படி என்ன கதையா இருக்கும் ?

கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பினை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த படத்திற்கு ‘வாழை’ என்று பெயரிடப்பட்டுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது.

நேற்று முன்தினம் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய இப்படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.மேலும் இதில் , நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் நடிக்கவுள்ளனர். 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் சமூகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

மாரி செல்வராஜ் எழுதிய பேய் என்ற சிறுகதையை தழுவி வாழை திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அந்த சிறுகதையில் வாழைத் தோட்டத்தில் பணியாற்றும் சிறுவர்களைப் பற்றி எழுதியிருந்தார். எனவே வாழை படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்