திருநெல்வேலியில் உள்ள பூர்வீக வீட்டில் பிரபல நடிகை - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

திருநெல்வேலியில் உள்ள பூர்வீக வீட்டில் பிரபல நடிகை - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

 2015 -ஆம் ஆண்டு வெளியான ‘ இது என்ன மாயம் ‘திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் ,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக உயந்துள்ளார்.

இவர் தமிழில் உதயநிதியின் மாமன்னன், ஜெயம் ரவியின் சைரன் , தெலுங்கில் நானி-யின் தசரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு வேலைகள் இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு செல்லும் கீர்த்தி சுரேஷ் ,தற்போது உறவினர்களை பார்க்க கிராமங்களுக்கு சென்றியிருக்கிறார்.

 திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள தனது மூதாதையரின் பூர்வீக வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற கீர்த்தி சுரேஷ் அங்குள்ள பழமை வாய்ந்த அந்த வீட்டின் முன் நின்று புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 பின்னர் ,அங்குள்ள உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்தும் மகிழ்ந்தார். மேலும் அங்கிருந்த 8-ம் நூற்றாண்டை சேர்ந்த மிகவும் பழமை வாய்ந்த திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கும் சென்று சுற்றி பார்த்து சாமியை வழிபட்டார். இந்த புகைப்படங்களை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு தற்போது  வைரலாகி வருகின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்