இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் லிஸ்ட்!

தமிழ், ஹிந்தி,கன்னடம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வார ஓடிடி தளத்தின் எந்த படங்கள் வெளியாக போகுது என்ற லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில்,

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு திரையரங்குகளில் ’ப்ரின்ஸ்’ படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்பெறவில்லை.குறிப்பாக சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் பிரின்ஸ் திரைப்படம். இந்த படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கன்னடா மொழியில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான படம் ‘காந்தாரா’.இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் அதிக சாதனைப் பெற்றுள்ளது. 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படுள்ள இப்படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தெலுங்கில் வெளியான ஆந்தாலஜி படமான ‘மீட் க்யூட்’ சோனி லிவில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை தெலுங்கு நடிகர் நானியின் சகோதரி தீப்தி கண்டா இயக்கிவுள்ளார்.

ஹிந்தியில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ’சுப்’ ஒரு மிஸ்டரி த்ரில்லர் திரைப்படமாகும். இந்த திரைப்படம் ஜீ5 ஓடிடியில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்