’அல வைகுந்தபுரமுலோ’ படத்தின் இந்தி ரீமேக் டீசர் வெளியானது - இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சனம்

 ’அல வைகுந்தபுரமுலோ’ படத்தின் இந்தி ரீமேக் டீசர் வெளியானது - இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சனம்

தெலுங்கு நடிகரும் இயக்குனருமான  திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் 2020-ஆம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான  படம் அல ’வைகுந்தபுரமுலோ’.இந்த படம் வெளியான சில நாட்களிலே அதிரடி மெகா ஹிட் அடித்து மாபெரும்  வெற்றியை பெற்று தந்தது.

இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையில் இந்த படத்தில் உருவான எல்லா பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு. அதிலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஃபுட்ட மொம்மா” பாடல் குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய நாயகன் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் வெற்றிப்படங்களில் ’அல வைகுந்தபுரமுலோ’ படமும் ஒன்று.

இந்த நிலையில் , பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரானவர் கார்த்திக் ஆர்யன். இவர்  தெலுங்கு மொழியில் வெளியான ’வைகுந்தபுரமுலோ’படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். அந்த படத்திற்கு ’ஷேஹ்ஸதா’என பெயரிடப்படுள்ளது.

இன்று கார்த்திக் ஆர்யனின் பிறந்த நாளை முன்னிட்டு ’ஷேஹ்ஸதா’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தினை தந்துள்ளனர்.

மேலும் ’ஷேஹ்ஸதா’ படத்தின் தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறுகையில் , கார்த்திக் ஆர்யன் மிகவும் திறமையான நடிகர்.அவருடைய பிறந்த நாளன்று இந்த படத்தின் டீசரை வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சி ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ’ஷேஹ்ஸதா’ படத்தின் டீசரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த  நடிகர் கார்த்திக் ஆர்யன் ,என் பிறந்த நாளன்று என்னுடைய ரசிகர்களுக்கு நான் கொடுக்கும்  கிப்ட் ’ஷேஹ்ஸதா’- இது என்று  குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் ஆர்யன் ,இது ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் மூவி. வட மாநில மக்களுக்கு ஏற்றவாறு இந்த படத்தை மாற்றியமைக்கப்படுள்ளது. இதில் கார்த்திக் ஆர்யன் ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இணையத்தள பக்கத்தில் ’அல வைகுந்தபுரமுலோ’மற்றும் ’ஷேஹ்ஸதா’படம் குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்