மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படம் டிராப் ஆகியதா ? தொடர்ந்து இணையவாசிகள் கேள்வி ?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படம் டிராப் ஆகியதா ? தொடர்ந்து இணையவாசிகள் கேள்வி ?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார் என்ற தகவல் கடந்த வருடங்களில் வெளியானது. அப்போது மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி கொண்டிருந்தால், அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்ததும் இதை ஆரம்பிப்பார் என்ற தகவல் வெளியானது.

அதேபோல் ,2021-ஆம் ஆண்டு வெளியான கர்ணன் படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூல் ரீதியான சாதனையும்  மாரி செல்வராஜ்-க்கு பெற்று தந்தது. கர்ணன் படத்தின் ஷீட்டிங் நடைபெற்று வந்த நிலையிலேயே துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கப்போவதாக கமீட் ஆனார். இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.

கர்ணன் படத்தின் பணிகள் முடிந்ததும் த்ருவ் விக்ரமை வைத்து இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ படத்தை இயக்குவதாக அறிவிப்பினை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியினை தந்தார்.

அந்த வகையில் , தற்போது மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீஸ்-கான பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து ரசிகர்கள் இந்த படத்தின் கதாநாயகனாக த்ருவ் விக்ரம் , தனுஷ், கலையரசனா ? என கேள்வி எழுப்பி வந்த நிலையில் , நேற்று புதிய படத்திற்கு ‘ வாழை’ என பெயரிடப்பட்டுள்ளது என்றும் அந்த படத்தின் கதாநாயகனாக கலையரசன் நடிக்கவுள்ளார் என்ற தகவலையும் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது.

இந்த அறிவிப்பினை பார்த்த பெரும்பாலனோர்  துருவ் விக்ரம் படம் என்ன ஆனது என்பது தான்.மேலும் இணையவாசிகள் பலரும் அப்போ துருவ் விக்ரம் படம் டிராப் ஆகியதா ? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வதந்திகளை வருகின்றன.

உண்மையில், அந்த படம் ட்ராப் ஆகவில்லையாம் .கலையரசன் நடிக்கும் ‘வாழை’ படத்தின் படப்பிடிப்பு  முடிந்ததும் த்ருவ் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெறும் என்றார் மாரி செல்வராஜ்.

இப்படம் சிறந்த கபடி வீரர் மனத்தி பி.கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்போவதாகவும் ,இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க இருப்பதால் அதற்கான பயிற்சியினை தொடர்ந்து அவர் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்