கிக் படத்திற்காக முதன்முறையாக சொந்தக் குரலில் பாடும் நடிகர் சந்தானம்

கிக் படத்திற்காக முதன்முறையாக சொந்தக் குரலில் பாடும் நடிகர் சந்தானம்

பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம்  “கிக்”. இவருடன் தன்யா ஹோப், ராகினி திவேதி மற்றும் பலர் நடிக்கிறார்கள். 

இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலுக்கான விளம்பர வீடியோ இன்று வெளியாகியுள்ளது. அதில் "சாட்டர்டே இஸ் கம்மிங்கு..."  (Saturday is cominguu) என்று ஆரம்பிக்கும் பாடலை முதல் முறையாக நடிகர் சந்தானம் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். இப்பாடலை கவிஞர் விவேகா எழுதியிருக்கிறார். இப்பாடலின் முழு வரிகளுக்கான வீடியோ அக்டோபர் 10 ஆம் தேதி மாலை 06.03 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போக்குகின்ற படம், சந்தானத்தின் "கிக்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஹிட் படங்களை கன்னடத்தில் கொடுத்து விட்டு இப் படம் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் ராஜ்.  

டாம்-ஜெர்ரி மாதிரி தான் ஹீரோவும் ஹீரோயினும். விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிற சந்தானம் எப்படியாவது கொஞ்சம் குறுக்கு வழியில் கூட போய் வெற்றியை அடைய துடிக்கிறவர். 'தாராள பிரபு' ஹீரோயின் தான்யா ஹோப், நேர்மையாய் விளம்பரத் துறையில் முன்னேற துடிக்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார். இரண்டு பேரும் எலியும் பூனையுமாக மோதிக் கொள்வது தான் கதை. சந்தானத்தை  விரும்பி பார்ப்பவர்களுக்கான படம் இது.

கன்னடத்தில் மிகவும் மரியாதையுடன் கவனிக்கப்படுகின்ற அர்ஜுன் ஜன்யா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஐந்து பாடல்களிலும் அவரின் இசை முற்றிலும் புதுசு. தமிழ் படம் என்றதும் சந்தோஷமாக கேட்டுட்டு பண்றார். இங்கே ஒரு நல்ல இடத்தையும் பிடிக்கணும், முத்திரையையும் பதிக்கணும்னு என்பது அவர் எண்ணம் எனப் படக்குழுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்