Ponniyin Selvan :வசூல் வேட்டையில் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்

Ponniyin Selvan :வசூல் வேட்டையில் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்

அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் என்ற நாவலை இயக்குனர் மணிரத்தினம் 2 பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்கியுள்ளார். 


திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் ,பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி ,வந்திய தேவனாக கார்த்தி, பழுவூர் ராணியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிசா ,உள்ளிட்ட திரை பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர். மேலும் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நேற்று முந்தினம் உலகம் எங்கும் வெளியானது. 

அந்த வகையில் உலகம் முழுவதும் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அமெரிக்காவில் நல்ல வசூல் குவிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அதாவது அமெரிக்காவில் இதுவரை 41 லட்சம் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது என கூறப்படுகிறது. அது இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய் என தெரிவிக்கின்றனர்.

பொன்னியின் செல்வனுக்கு முன்பு வெளியான இந்திய படங்கள் முதல் வாரத்தில் ஆர்.ஆர்.ஆர் 9.5 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், பிரமாஸ்திரா 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் வசூலித்துள்ளது.

இந்த நிலையில்.பொன்னியின் செல்வன் முதல் வாரமே பெரும் வசூலை ஈட்டியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்