தனித்தீவு செல்கிறார்களா புதுமண தம்பதிகள்? - மகாலட்சுமி ரவீந்தர் பேட்டி

தனித்தீவு செல்கிறார்களா புதுமண தம்பதிகள்? - மகாலட்சுமி ரவீந்தர் பேட்டி

நான் கன்னித்தீவு செல்கிறேனா என்பது குறித்து அண்மையில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் தூத்துக்குடியில் அதிரடி பேட்டி அளித்துள்ளார். 

தமிழ்த் திரை உலகில் பலரது திருமணங்கள் பரபரப்பாக பேசப்பட்டாலும் சமீபத்தில் சின்னத்திரை நடிகை  மகாலட்சுமி திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவதாக திருமணம் செய்தார். உடல் பருமனான இவரை மகாலட்சுமி திருமணம் செய்தது திரையுலகத்தினரை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் ஆச்சரியத்தில் பல்வேறு விமர்சனங்கள் ஏற்படுத்தியது.

இவர்களது திருமணத்தை பல்வேறு சமூக ஊடங்களில் ரசிகர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இந்நிலையில் திருமணத்திற்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்த இந்த தம்பதியினை தூத்துக்குடி செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த ரவீந்தர் சந்திரசேகர் கூறுகையில், “ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது எனக்கே அதிர்ச்சியாகி உள்ளது. திருமணம் இவ்வளவு பேமஸ் ஆக வேண்டிய அவசியம் இல்லை.

எங்கள் திருமணத்திற்கு முன்பு தமிழ் திரையுலகில் பிரபலத்தின் திருமணத்தை ஒளிபரப்பிய நிறுவனம் அதில் பெறாத வருமானத்தை எங்களது திருமணத்தை வெளியிட்டு பெற்றது என்பது ஒரு வித்தியாசமான செயல். 

செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி நான் தனி தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் ஒரு வதந்தி” எனத் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்