அஜய் தேவ்கனின் 'தேங்க் காட்' படத்திற்கு தடை கோரிய அமைச்சர்

அஜய் தேவ்கனின் 'தேங்க் காட்' படத்திற்கு தடை கோரிய அமைச்சர்

அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரகுல் பிரீத் சிங் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள பொழுதுபோக்கு திரைப்படம் 'தேங்க் காட்'.

கதாநாயகன் ஒருவன் விபத்தில் இறந்து மேலுலகம் சென்று எமதர்மன் சபையில் நடக்கும் நிகழ்வை சித்தரிப்பது போன்றதான ஏற்கனவே வெளிவந்த பல திரைப்படங்களின் மற்றொரு சாயலில் மேலும் ஒரு நகைச்சுவை திரைப்படம் இது. 

இந்த திரைப்படத்திற்கு தடைவிதிக்க கோரி  மத்தியபிரதேச மாநில அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

படத்தில் இந்து கடவுள்களை பொருத்தமற்ற முறையில் சித்தரித்துள்ளதாக சாரங் குற்றம்சாட்டியுள்ளார். தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக காத்திருக்கிறது இத்திரைப்படம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.64%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.99%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.38%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்