"கேப்டன் மில்லர்"-உடன் இணையும் லோகேஷ் படத்தின் நாயகன்

தமிழ் திரையின் முன்னணி நடிகருள்  ஒருவர்  தனுஷ் .இவர் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்' திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். 

அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இப்படம் வருகிற 29-ஆம் தேதி வெளியாகிறது .

இதைத் தொடர்ந்து, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ள படம் கேப்டன் மில்லர். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். வரலாற்று பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் வீடியோ அண்மையில் வெளியானது. ..

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாநகரம் படத்தின் மூலம் பிரபலமான சந்தீப் கிஷான், கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாநகரம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்