சினிமா
எனது படத்தை மார்பிங் செய்து விட்டார்கள்: ரன்வீர் சிங் புலம்பல்
எனது படத்தை மார்பிங் செய்து விட்டார்கள்: ரன்வீர் சிங் புலம்பல்
எனது படத்தை மார்பிங் செய்து விட்டார்கள்: ரன்வீர் சிங் புலம்பல்
அந்தரங்க பகுதிகள் தெரியும்படியான படம் மார்பிங் செய்யப்பட்டுள்ளது. அது என்னுடைய போட்டோஷூட் படமே இல்லை என போலீஸ் விசாரணையின் போது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் புலம்பி உள்ளார்.
நிர்வாண போட்டோஷூட் நடத்தி சிக்கலில் மாட்டிக் கொண்ட ரன்வீர் சிங் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆபாசமான செயல்பாடுகள் அடிப்படையிலான இவ்வழக்கின் விசாரணைக்கு ரன்வீர் ஆஜரான போது சரமாரியாக அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு பதில் அளித்து பேசிய அவர், எனது படத்தை அந்தரங்க பகுதிகள் தெரியுமாறு யாரோ மார்பிங் செய்துள்ளார்கள். பத்திரிகைக்கான போட்டோஷூட்டின் போது எடுத்த படமல்ல என விளக்கம் அளித்துள்ளார்.