ஒரே இடத்தில் சந்தித்த கோலிவுட், பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் - காரணம் தெரியுமா?

ஒரே இடத்தில் சந்தித்த கோலிவுட், பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் - காரணம் தெரியுமா?

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர்.

"பிஸ்ட்" திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் "ஜெயிலர்". இந்த படத்தில் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், ரம்யா கிருஷணன், வசந்த ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்று வருகிறது. 

இதேபோல் இயக்குநர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் "ஜவான்" திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, பிரியாமணி, தீபிகா படுகோன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடத்தி வருகின்றனர்.

இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் ஆதித்யராம் ஸ்டுடியோஸில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரும் சந்தித்து சில நிமிடங்கள் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.44%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.09%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.46%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்