லண்டன் ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து

லண்டன் ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து

லண்டனில் உள்ள சவுத்வார்க் ரயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த தீ, வாகனம் நிறுத்துமிடத்துக்கும் பரவியது. இதனால் ரயில் நிலையத்திலிருந்து பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியது. 

மேலும் இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் தீ வேகமாகப் பரவியதால் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடினர். இருப்பினும் ரயில் நிலையம் அருகே வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டுக் கதவு, ஜன்னல்களை மூடி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

 அதன் பின்பு நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தால் ரயில் நிலையம் மூடப்பட்டது. இதனால் ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறார்கள்

Find Us Hereஇங்கே தேடவும்