ஜிம்பாவே நாட்டில் பரவும் தட்டம்மை ; 156 குழந்தைகள் உயிரிழப்பு

ஜிம்பாவே நாட்டில் பரவும் தட்டம்மை ; 156 குழந்தைகள் உயிரிழப்பு

ஜிம்பாவே நாட்டில் பரவி வரும் தட்டம்மை நோயால் 156 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் .

கடந்த ஏப்ரல் மாதம் ஜிம்பாவே நாட்டில் பரவி உள்ள தட்டம்மை நோய் தற்போது நாடு முழுவதும் ஏராளமாகப் பரவி வருகிறது .

மேலும் தட்டம்மை நோயால் இதுவரை இரண்டாயிரத்து முப்பத்து ஐம்பத்து ஆறு பேர் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 156 குழந்தைகள் இறந்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளன .

அதோடு உயிரிழந்த பெரும்பாலான குழந்தைகள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்றும் மத நம்பிக்கைகள் காரணமாகப் பலர் தங்களது குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த மறுப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர் .

இந்த நிலையில் பிறந்த ஆறு மத குழந்தைகள் முதல் 15 வயது வரை 

சிறியவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த ஜிம்பாவே அரசு  இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது .

Find Us Hereஇங்கே தேடவும்