கனிமவளக் கடத்தலுக்கு காவல்துறையே துணைபோகிறதா? - கமல்ஹாசன் கேள்வி

கனிமவளக் கடத்தலுக்கு காவல்துறையே துணைபோகிறதா? - கமல்ஹாசன் கேள்வி

சேலம் அருகே கனிமவளம் கடத்தல் குறித்து புகார் எழுந்தும் விசாரிக்காமல் இருப்பது காவல்துறையும் துணைபோவதாக தெரிவதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “சேலம் மாவட்டம் மாமாங்கம், செட்டிச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வெள்ளைக் கற்கள் எனப்படும் கனிமம் கடத்தப்படுவதாக தொடர்ந்து பல்லாண்டுகளாகப் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. சமீபத்தில், இந்தக் கற்களைக் கடத்திய லாரியை பின்தொடர்ந்த ஊடகவியலாளர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியளிக்கிறது. கடத்தலைத் தடுக்க வேண்டியவர்களே, அதற்குத் துணைபோவது ஏற்புடையதல்ல.  எனவே, காவல்துறை தலைமை இயக்குநர், சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சேலம் மாவட்ட ஆட்சியர், கனிம வளத் துறை அமைச்சர் ஆகியோர் தலையிட்டு கடத்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

கனிமவளக் கடத்தலை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுத்த ஊடகவியலாளர்களைத்  தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்திலும் தமிழ்நாடு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துவதாக பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.44%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.09%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.46%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்