ரசிகர்களுடன் சேர்ந்து "திருச்சிற்றம்பலம் " படத்தை பார்த்து கொண்டாடிய அசுரன்

ரசிகர்களுடன் சேர்ந்து

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’ இன்று வெளியாகியுள்ளது .

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் "திருச்சிற்றம்பலம் ".இதில் நித்யா மேனன் ,பாரதிராஜா ,பிரகாஷ்ராஜ் ,ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் .

இந்த படத்தில் நடிகர் தனுஷ் உணவு டெலிவரி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

இந்த நிலையில் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் தனுஷ் நடிப்பில் உருவாகிய உள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். மேலும் அந்த திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள தனுஷ் பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும் ரசிகர்கள் கொண்டாடினர்.

சென்னையில் சிறப்பு காட்சிகள் காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது. கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் இணைந்து ரசிகர்களுடன் திருச்சிற்றம்பலம் படத்தைப் பார்த்து ரசித்தனர். நடிகர் தனுஷின் வருகையால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். 

ரசிகர்களுடன் திரைப்படத்தைப் பார்க்க ஏராளமான திரை பிரபலங்கள் ரோகிணி திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு அனிருத்-தனுஷ் கூட்டணியில் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.49%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.95%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.56%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்