அரவிந்த் சாமி நடிக்கும் ரெண்டகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அரவிந்த் சாமி நடிக்கும் ரெண்டகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அரவிந்த் சாமி நடித்துள்ள ரெண்டகம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் மின்சார கனவு, பம்பாய் போன்ற படங்களில் நடித்து பிரபலாமனவர் நடிகர் அரவிந்த் சாமி. சில வருடங்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டு இருந்த அவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் ரீ எண்டரி கொடுத்தார். தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து பெரிதும் கவனம் பெற்ற அரவிந்த் சாமி நடிப்பில் சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசூரன் மற்றும் கள்ளபார்ட் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபன் இணைந்து நடித்துள்ள ரெண்டகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகரான குஞ்சாக்கோ போபன் ரெண்டகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகும் இப்படம் மலையாளத்தில் ஒட்டு என்ற பெயரில் வெளியாகிறது. 

பெலினி டிபி இயக்கியுள்ள இந்த படத்தை நடிகர் ஆர்யாவில் தயாரிப்பு நிறுவனமான தி ஷோ பீப்பிள் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை கேரளா, கோவா, மங்களூர், மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளனர். இந்நிலையில், ரெண்டகம் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்