."நமது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாட வேண்டும் "-ரஜினிகாந்த் ட்வீட்

.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாம் அனைவரும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று சொல்லி சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார் .

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில் , இல்லங்கள் தோறும் இன்று முதல் 15-ந்தேதி வரை தேசியக் கொடி ஏற்றுங்கள் என கடந்த 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 

இந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் நேற்று தேசியக் கொடியை ஏற்றினார். மேலும்  இதனைத் தொடர்ந்து அவர் தன்னுடைய ட்விட்டர்  பதியில் பதிவிட்ட வீடியோவில், நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை நாம் அனைவரும் நமது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.64%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.99%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.38%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்