இந்திய ராணுவத்தை அவமதிக்கிறதா "லால் சிங் சத்தா" திரைப்படம் ?இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் எதிர்ப்பு

இந்திய ராணுவத்தை அவமதிக்கிறதா

"லால் சிங் சத்தா" திரைப்படத்தில் இந்திய ராணுவத்தை அவமதித்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மான்டி பனேசர்  எதிர்ப்பு தெரிவித்துள்ளார் .

பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான், நடித்துள்ள "லால் சிங் சத்தா" திரைப்படம் நேற்று வெளியானது 

1994இல் ஹாலிவுட்டில் வெளியாகி ஆஸ்கர் விருது பெற்ற "பாரஸ்ட் கம்ப்" ஆங்கிலப் படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மான்டி பனேசர் இந்த திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், " இந்திய ராணுவம் மற்றும் சீக்கியர்களுக்கு லால் சிங் சத்தா அவமரியாதை, அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டிவிட்டர் பதிவில், "லால் சிங் சத்தாவில் அமீர்கான் ஒரு முட்டாள் வேடத்தில் நடித்திருப்பதாகவும் அந்த திரைப்படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்"

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.49%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.95%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.56%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்