பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி ,கமல் பங்கேற்பு ...

பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி ,கமல் பங்கேற்பு ...

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கமல் கலந்து கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது .

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டீசர் கடந்த மாதம்  பிரம்மாண்டமான முறையில் வெளியானது .

இதற்கு முன்னதாகவே அப்படத்தில் நடிக்கும் விக்ரம் ,கார்த்தி ,ஐஸ்வர்யா ராய் ,திரிஷா ,ஜெயம் ரவி ,ஆகியோரின் புகைப் படத்தோற்றங்களைப் படக்குழு வெளியிட்டது .அதன் பின் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் "பொன்னி நதி " வெளியானது .இதில் ஜெயம் ரவி ,கார்த்தி ,ஜெயராம் ஆகியோர் பங்கேற்று இருந்தனர் .

தற்போது பொன்னியின் செல்வன்  படத்தின் மற்ற பாடல்களை வெளியிடும் வகையில் இசை வெளியிட்டு விழா நடத்துவதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா முடிவு செய்துள்ளது .

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்ட் ரஜினி காந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது .மேலும் இந்த படத்தை இந்திய அளவில் பிரபலப்படுத்த ரஜினி கமல் முன்வந்துள்ளதாகத் தெரிகிறது .

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.64%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.99%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.38%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்