தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் இன்று மாலை ஆலோசனை

தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் இன்று மாலை ஆலோசனை

தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செல்லவுள்ள நிலையில் ஆதரவாளர்களுடன் இன்று மாலை  ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை விசாரணைக்கு வருகிற நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதற்காக சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் சென்னைக்கு வருகை தர உள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் இந்த ஆலோசனை இன்று நடைபெறுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்