கணவர் இறப்பிற்கு பின்னர் தோழிகளுடன் இருக்கும் போட்டோவை சேர் செய்த நடிகை மீனா...!

கணவர் இறப்பிற்கு பின்னர் தோழிகளுடன் இருக்கும் போட்டோவை சேர் செய்த நடிகை மீனா...!

கணவர் இறப்பிற்கு பின்னர் முதன்முறையாக தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை மீனா வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அன்புடன் ரஜினிகாந்த் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக திகழ்ந்தவர் நடிகை மீனா.

இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை நடிகை மீனா திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் நைனிகா என்ற மகள் உள்ளார். அம்மாவை போன்றே நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக நடிகர் விஜய்யுடன் தெறி திரைப்படத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் ஒரு மனைவியாகவும், அம்மாவாகவும் மீனா பொறுப்புடன் இருந்து வந்தார். மேலும், தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாகவும் வைத்திருந்தார்.

இந்நிலையில், நுரையீரல் பிரச்னை காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவரான வித்யாசாகர் எதிர்பாராத விதமாக கடந்த ஜூன் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துரையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல முன்னணி நடிகர்கள் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தனது கணவர் இறந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிய நிலையில் அதிலிருந்து மெல்ல மெல்ல வெளிவரும் மீனா மற்றும் மகள் நைனிகா ஆகியோரை நடிகை சங்கீதா, ரம்பா மற்றும் சங்கவி ஆகியோர் சந்தித்துள்ளனர்.

மேலும், நடிகை சங்கீதா, ரம்பா மற்றும் சங்கவி ஆகியோர் தங்களுடைய குடும்பத்தினருடன் வந்து மீனாவை சந்தித்துள்ள புகைப்படங்களை மீனாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கணவர் இறப்பிற்கு பின்னர் முதன்முறையாக தனது தோழிகளுடன் இருக்கும் போட்டோவை சேர் செய்துள்ளதை பார்த்த ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் தங்களுடைய கமெண்ட்களை சேர் செய்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.38%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.13%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்