யார் அடுத்த துணை ஜனாதிபதி ?;நிறைவடைந்தது துணை ஜனாதிபதி தேர்தல்

 யார் அடுத்த துணை ஜனாதிபதி ?நிறைவடைந்தது துணை ஜனாதிபதி தேர்தல்

நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் ,தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது .

துணை ஜனாதிபதியான வெங்கையா  நாயுடுவின் பதவிக்காலம் வருகிற 10-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் ,புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் இன்று  நடைபெற்றது 

இந்த துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் ஜன்கர் நிறுத்தப்பட்டுள்ளார் .எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்

 டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இடைவெளியின்றி நடந்த இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில் வாக்குகள் எண்ணி முடிந்த உடன் தேர்தல் அதிகாரி உத்பால் குமார் சிங் முடிவை வெளியிடுகிறார். எனவே புதிய துணை ஜனாதிபதி யார் என்பது இன்று மாலையில் இன்னும் சிறிது நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Find Us Hereஇங்கே தேடவும்