“லைகர் ” படத்தின் பாடல் வெளியானது

“லைகர் ” படத்தின் பாடல் வெளியானது

விஜய் தேவர்கொண்டா நடித்த “லைகர் ” படத்தின் பாடல் இன்று வெளியாகியுள்ளது .

தெலுங்கு இயக்குனர் பூரிஜகநாதன் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடித்த ” “லைகர் ” படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது .இந்த படத்தில் மைக் டைசன் , அனன்யா பாண்டே , ரம்யா கிருஷ்ணன் போன்ற முதலானோர் நடித்துள்ளனர் .இது தமிழ் ,தெலுங்கு என பல மொழிகளில் வெளியாக இருக்கிற இப்படம் ,வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது எனப் படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தில் குத்துச்சண்டை வீரனாக விஜய் தேவர்கொண்டா நடித்துள்ளார்.அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரரான மைக் டைசன் நடித்துள்ளார்.ஒரு சாதாரண இடத்திலிருந்து வந்த கதாநாயகன் இந்திய அளவில் எவ்வாறு குத்துச் சண்டை வீரராக உயர்ந்தார் என்பதை ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 

மேலும் இதனைத் தொடர்ந்து இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நடந்து வருகிறது . இந்த நிலையில் லைகர் படத்தில் இடம்பெற்றுள்ள ஆஃபாட் என்ற பாடல் வெளியாகியுள்ளது.இந்த பாடலுக்கு தனிஷ்ச் பாச்சி இசையமைக்கத் தமிழில் இந்த பாடலை தீபக் ப்ளூ மற்றும் ஹரி பிரியா பாடியுள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்