இயக்குநர் சங்கருக்கு டாக்டர் பட்டம்

இயக்குநர் சங்கருக்கு டாக்டர் பட்டம்

வேல்ஸ் பல்கலைக்கழகம் இயக்குநர் சங்கருக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது .

தமிழ் திரைத்துறையில் பிரமாண்டத்தின் பிரம்மன்  என்ற சொல்லுக்குப் பொருள் எழுதியவர் இயக்குநர் சங்கர். தமிழ் திரைத்துறை அதுவரை பார்த்திராத காட்சிகளை நம் கண்முன் நிறுத்தியதில் இயக்குநர் சங்கருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. சங்கர் இயக்குநராகக் களமிறங்கிய துவங்கியதிலிருந்து ஆச்சரியப்படுத்திய ஜெண்டில் மேன் கண்ணாடி பஸ், முதல்வனில் நம்பவே முடியாத கிராபிக்ஸ் பாம்பு, நண்பனில் கலர் அடித்த ரயில் வண்டி, சிவாஜியில் நாயகனின் முகம் பதித்த தொப்பை மனிதர்கள்,ஜீன்ஸ் படத்தில் டான்ஸ் ஆடும் எலும்புக்கூடு, மற்றும் உலகமே வியந்து பார்த்த எந்திரன்  எனப் பிரம்மாண்ட விருந்து படைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இது போன்ற பல படங்களைத் தமிழ் திரைத்துறையிற்குத் தந்தவர் இயக்குநர் சங்கர் .தற்போது தெலுங்கு கதாநாயகனான ராம் சரணை வைத்து "RC15 " படத்தை இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்தின் பணிகள் முடிந்ததும் உலக நாயகனை வைத்து இந்தியன்2 படத்தை இயக்க போவதாகவும் தெரிவித்துள்ளார் .

இந்த நிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகம் இயக்குநர் சங்கருக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் துறை ரீதியாகச் சாதனை படைத்து வரும் நபர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்து வருகிறது. 

அந்த வகையில்  இந்த ஆண்டு இயக்குநர் சங்கர், கிரிக்கெட் வீரர் ரெய்னாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதன் மூலம் இயக்குநர் சங்கர் 2வது டாக்டர் பட்டத்தைப் பெறுகிறார். 

அதோடு இதற்கு முன்னதாக 2007ம் ஆண்டு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

 

Find Us Hereஇங்கே தேடவும்