எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன் ; முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன் ; முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

சமீபத்தில் வெளியான பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம்  பார்த்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்திபனை பாராட்டியுள்ளார் .

ஏராளமான தடைகளுக்குப் பிறகு சமீபத்தில் வெளியான நான் லீனியர் திரைப்படமான  'இரவின் நிழல் " திரைப்படத்தைப் பார்த்திபன் நடித்தும் இயக்கியுள்ளார் சமீபத்தில் வெளியான திரைப்படங்களைப் பார்த்து முதல்வர் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார் .அந்த வகையில் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தைச் சிறப்புக் கட்சியாகக் காட்டப்பட்டது .அவருடன் பார்த்திபனும் இருந்தார் .

இத்திரைப்படத்தைப் பார்த்த முதல்வர் பார்த்திபனைப் பாராட்டினார்.மேலும்  இது குறித்து டிவிட்டரில் குறிப்பிட்டிருப்பதாவது ;

எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன் !

ஒத்த செருப்பு பட்டத்துக்குப் பிறகு ஒத்த ஷாட் படம் இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம் என்றார்.நான் லீனியர் single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்.என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவருக்குப் பதிலளித்த பார்த்திபன் நான் லீனியர்-ல்,நான் சீனியர் எனத் தமிழகமே பாராட்டிவிட்டது.முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி.பாராட்டப்படும் போது பட்ட கடனும் படும் கஷ்டமும் தற்காலிகமாகத் தற்கொலை செய்து கொள்கின்றன.இனி 

பார்…பார்க்க ….பாராட்டும் என்றும் கூறியுள்ளார் .

Find Us Hereஇங்கே தேடவும்