கமலுடன் பணிபுரிந்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம் - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு

கமலுடன் பணிபுரிந்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம் - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் முன்னேற்பாடு பணிகள் குறித்து நடிகர் கமலுடன் இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்துரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சர்வதேச அளவிலான 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு தொடங்கிய போட்டிகள் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-த்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் விருந்தினர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா கடந்த 28 ஆம் தேதி சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி போட்டியை தொடக்கி வைத்தார். இவ்விழாவில் வைரமுத்து, ரஜினிகாந்த், கார்த்தி மற்றும் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும், நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலில் தமிழ்நாட்டின் கலாசார வளர்ச்சி குறித்த நிகச்சிக்கலை நடைபெற்றது. 1200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில் தமிழர் கலை, கலாசாரம் செழித்து இருந்ததற்கான சான்று, முதலாம் நூற்றாண்டில் கரிகால சோழன் கல்லணை கட்டியது குறித்து முப்பரிமாண படத்துடன் கமலின் குரலில் விளக்கமளிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக கமல்ஹாசனுடன் இயக்குநர் விக்னேஷ் சிவன் குழுவினருடன் கலந்துரையாடும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “உலகநாயகனுடன் சில மணிநேரம் செலவழிக்க நேரம் கிடைத்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய அறிவு, அவர் அளித்த விளக்கங்கள் மற்றும் அவர் எங்களுக்கு கூறிய நுணுக்கங்கள் ஆகியவை எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது” என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்