ரன்பீர் கபூர் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு

ரன்பீர் கபூர் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு

மும்பையில் நடைபெற்று வந்த பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளனர் .

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் இந்தி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மும்பை நகரில் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது .

இதனால், அந்த பகுதி முழுவதும் கரும்புகையாகக் காட்சியளித்தது. காற்றில் பரவிய புகையால் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் தண்ணீரைப் பீச்சி அடித்து நீண்ட நேரத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளதாக முதற் கட்ட தகவல் கிடைத்துள்ளது. தீ விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்த நிலையில் வருகிற 2023ம் ஆண்டு மார்ச் 8ந்தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில், போனி கபூர் மற்றும் டிம்பிள் கபாடியா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

Find Us Hereஇங்கே தேடவும்