எனது ரசிகர்கள்தான் எனது ஆதரவு தூண்கள் - தனுஷ் நெகிழ்ச்சி பதிவு...!

நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியாக நடித்து வரும் தன்ஷ் நேற்று தன்னுடைய 39 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு இந்திய ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும், நடிகர் பிரசன்னா நடிகர் தனுஷ் பியானா இசைக்கும் வீடியோவை வெளியிட்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்த்தார்.
இதற்கு முன்னதாக தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாகவுள்ள திருசிற்றம்பலம் படத்தில் இருந்து ஒரு பாடலும், நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட்டுடன் கூடிய போஸ்டர் மற்றும் வாத்தி படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் “எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. எனது நல்வாழ்த்துக்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழ்த்த நேரம் ஒதுக்கியவர். உங்களின் நிபந்தனையற்ற அன்பு, ஊக்கம் மற்றும் ஆதரவிற்காக என்னை வாழ்த்திய எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த 20 ஆண்டுகளாக எனது ரசிகர்கள்தான் எனது ஆதரவின் தூண்கள். உங்கள் எல்லா விருப்பங்களையும் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நன்றியுடனும் உணர்கிறேன். விரைவில் திரைப்படங்களில் சந்திப்போம்” என பதிவிட்டுள்ளார்.