"வாத்தி "-படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது

தனுஷ் நடித்துள்ள "வாத்தி " படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது .

தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு ,அவர் நடித்துள்ள "வாத்தி " படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.இப்படம் தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளும் உருவாகியுள்ளது .தெலுங்கில் வெளியான தோழி ப்ரேமா,mr.மஞ்சு ,போன்ற படத்தை இயக்கிய  வெங்கி அட்லூரி இந்த படத்திற்கு தெலுங்கில் "சார்' என பெயரிடப்பட்டுள்ளன .

மேலும் இந்த படத்தில் தனுஷுடன் ஜோடியாக சம்யுத்தா மேனன் நடிக்கிறார்.இதற்கு ஜி.வீ.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.தெலுங்கில் தனுஷின் வேலையில்லாத பட்டதாரி மற்றும் மாரி படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து தெலுங்கிலும் சார் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் தனுஷ் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

 இந்தப் படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என இந்தப் படத்தைத் தயாரித்துவரும் சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

Find Us Hereஇங்கே தேடவும்