கலகத் தலைவனாகும் உதயநிதி ஸ்டாலின் - வெளியானது புதிய அறிவிப்பு

கலகத் தலைவனாகும் உதயநிதி ஸ்டாலின் - வெளியானது புதிய அறிவிப்பு

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கலகத் தலைவன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

மீகாமன் , தடையற தாக்க,தடம் போன்ற வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட படத்தை இயக்கியவர் இயக்குநர் மகிழ் திருமேனி.உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் கிடைத்த வரவேற்புக்குப் பிறகு,தற்போது  உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும்  "மாமன்னன் "திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ,பகத் பாசில் ,வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர் .

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சேலத்தில் நடந்து முடிந்தது .இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் , இந்த படத்திற்குப் பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் ,முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என்று உதயநிதி கூறியுள்ளார் .

ஆனால் தற்போது உதயநிதி நடிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை புகைப்படத்தை  இன்று படக்குழு வெளியிட்டுள்ளது .இந்த படத்திற்கு "கலகத் தலைவன் " என பெயரிட்டுள்ளன .இதில் நிதி அகர்வால் நடிக்கவுள்ளார் .மேலும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந் தேவா மற்றும் அரோல்குரோலி இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்திற்குக் கலகத் தலைவன் என தலைப்பிடப்பட்டிருப்பதாகவும்,அதற்கான மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது.கலகத் தலைவன் படத்தின் பிந்தைய பணிகள் நடைபெற்று வருகிறது.இப் படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் டி.வி பெற்றுள்ளது .மேலும் இப்படம் குறித்து பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளனர் .

Find Us Hereஇங்கே தேடவும்