நயன் - விக்கி திருமண வீடியோ சர்ச்சை - முற்றுப்புள்ளி வைத்த ஓ.டி.டி நிறுவனம்

நயன் - விக்கி திருமண வீடியோ சர்ச்சை - முற்றுப்புள்ளி வைத்த ஓ.டி.டி நிறுவனம்
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி. தள நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. 

சினிமா உலகமே எதிர்பார்த்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9 - ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  
இந்த திருமண வீடியோ உரிமையை பிரபல ஓ.டி.டி. தள நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், திருமணத்திற்கான மொத்த செலவையும் அந்த நிறுவனமே செய்துள்ளது என்றும் செய்திகள் பரவியது. திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியும், திருமண நிகழ்வுகள் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வரை வெளியாகவில்லை. அவ்வப்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியாக உள்ளது போன்ற புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி வந்தது. இதனால் திருமண வீடியோவை விரைவில் வெளியிடுமாறு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். 

இதனிடையே, திருமண வீடியோ பதிவுக்கான ஒப்பந்தத்தில் இருந்து பிரபல ஓ.டி.டி. தளம் பின்வாங்கியுள்ளது எனவும், இதுகுறித்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியானது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சம்பந்தப்பட்ட ஓ.டி.டி. தள நிறுவனம் தங்களது ட்விட்டர் தளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளன. அதில், "நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ எங்கள் ஓ.டி.டி. தளத்தில் தான் விரைவில் வெளியாக போகிறது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை" என பதிவிட்டுள்ளது. 

Find Us Hereஇங்கே தேடவும்