நடிகர் சூர்யாவுக்கு ரஜினி,போனிகபூர் உள்ளிட்டோர் ட்விட்டரில் வாழ்த்து

நடிகர் சூர்யாவுக்கு ரஜினி,போனிகபூர் உள்ளிட்டோர் ட்விட்டரில் வாழ்த்து

சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றிருக்கும் நடிகர் சூர்யாவுக்கு ரஜினி மற்றும் போனிகபூர் உள்ளிட்டோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளன.

இந்தியாவின் தொன்மையும் முதன்மையுமான 68-வது தேசிய விருது ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது .அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படத்திற்கான விருதினை நேற்று "தேசிய திரைப்பட இயக்குநகரம்" அறிவித்துள்ளது .

அதில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 நவம்பர் 12 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளிவந்த "சூரரைப் போற்று "திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை பெற்றுள்ளது .அதோடு சிறந்த நடிகருக்கான விருது நடிகர் சூர்யாவுக்கு , சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி , சிறந்த திரைக்கதை இயக்குநர் சுதா கொங்கரா , ஷாலினி நாயர் , மற்றும் சிறந்த இசையமைப்பாளர் ஜி.வீ.பிரகாஷ் என சூரரைப் போற்று படத்தில் பணிபுரிந்த படக்குழுவினருக்குத் தேசிய விருது கிடைத்ததை அடுத்து  ஏராளமான நடிகர் , நடிகைகள் என  தங்களது வாழ்த்தினை அப்படக் குழுவினருக்கு தெரிவித்து வருகின்றன .

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ,தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவுக்கு ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது ;"தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும், சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்" என்று தெரிவித்துள்ளார் .

இதேபோல் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ள ட்விட்டர் வாழ்த்து செய்தியில், 68வது தேசிய திரைப்பட விருதுகளில் முறையே சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதை வென்றதற்காகவும், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசையைச் சூரரைப் போற்று வென்றுள்ளது பாராட்டத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்