அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.
அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இந்தப் படத்தை தொடர்ந்து அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை. தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள தேவராட்டம் படம் நாளைக்கு திரைக்கு வரவிருக்கிறது.
அவருக்கு படவாய்ப்புகள் சரியாக வராததற்கு காரணம் அவர் குண்டாக இருப்பது தான் என பலரும் கருத்து தெரிவித்தனர். மஞ்சிமாவால் தன்னுடைய உடல் எடையை குறைக்க முடியவில்லை. ஆனால் அதற்கு பதிலாக அவர் வேறு ஒரு ரகசியத்தை கையாண்டுள்ளார். தன்னை ஸ்லிம்மாக காட்டும் விதமான ஆடைகளை உருவாக்கி தரும்படி தன்னுடைய ஆடை வடிவமைப்பாளரிடம் கூறியுள்ளார்.
போட்டோ ஷூட்டிங்கின் போது, எந்த கோணத்தில் நின்றால் தான் ஒல்லியாக தெரிவேன் என ஆலோசனை கேட்டு போஸ் கொடுப்பாராம் மஞ்சிமா. அதனால் தான் உடல் எடையை குறைக்காமலே ஒல்லியாக தெரிகிறாராம்.