’விடுகதையா இந்த வாழ்க்கை’- ரசிகரின் கேள்விக்கு ஓவியா பதில்!
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஓவியா.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. அதன் பிறகு அவரது நடிப்பில் 90ML, காஞ்சனா உள்ளிட்ட படங்கள் வெளியானது.
ஓவியா தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார். அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அனைத்து கேள்விகளுக்கும் அவர் வெளிப்படையாக பதில் அளித்ததாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். தங்களுக்கு பதில் அளிக்கவில்லை என சில ரசிகர்கள்கள் வருத்தமும் அடைந்துள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் ஓவியின் ஆதரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தானாம். இதனை கேட்ட சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அதே போல் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் என ஓவியா ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
உங்களது வாழ்க்கையை ஒரு பாடல் மூலமாக விளக்க வே?ண்டும் என்றால் அது என்ன பாட்டாக இருக்கும் என ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஓவியா ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ என கூறியுள்ளார். உடனே ரசிகர்கள் அப்படி என்ன பிரச்சனை என கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.
வீரபாண்டி கோட்டையிலே பாடல் என்றால் ஓவியாவுக்கு ரொம்ப பிடிக்குமாம்.