இஷான், நல்ல பையன் என அப்பா நினைக்கிறார்: ஜான்வி கபூர்!

இஷான், நல்ல பையன் என அப்பா நினைக்கிறார்: ஜான்வி கபூர்!

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், தடக் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர்,  தடக் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக இஷான் கட்டார் நடித்திருந்தார். இஷான் கட்டாரும், ஜான்வி கபூரும் காதலிப்பதாக திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் அடிக்கடி ஜோடியாக வெளியே செல்கிறார்கள். 

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜான்வி கபூர், தான் யாருடனும் அடிக்கடி வெளியே செல்வதில்லை என்றும், தான் யாருடன் சென்றாலும் தன்னுடைய அப்பா கவனிப்பார் என்றும் கூறியுள்ளார். 

போனி கபூர், இஷான் பற்றி என்ன நினைக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘இஷான் நல்ல நடிகர் மற்றும் மிகவும் நல்ல பையன்’ என நினைக்கிறார் என வெட்கப்பட்டுக் கொண்டே கூறியுள்ளார்.  

இஷான் கட்டாரும் நடிகை தாரா சுதாரியாவும் காதலிப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்த கேள்விக்கு ஜான்வி பதிலளிக்காமல், நழுவிவிட்டார். இஷான் கட்டார் தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என கூறியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com