பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா மற்றும் ஆரவ் பங்கேற்றனர்.இவர்களுக்கு இடையே மருத்துவ முத்தம்,காதல் என பல விஷயங்கள் நடந்த பிறகு,இருவரும் நண்பர்கள் என்று அறிவித்தனர்
பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா மற்றும் ஆரவ் பங்கேற்றனர். இவர்களுக்கு இடையே மருத்துவ முத்தம், காதல் என பல விஷயங்கள் நடந்த பிறகு, இருவரும் நண்பர்கள் என்று அறிவித்தனர். அடிக்கடி இருவரும் எடுத்துக்கொள்ளும் போட்டோக்களை இணையத்தில் வெளியிடுவர்.
இந்நிலையில் நேற்று நடிகை ஓவியாவின் பிறந்த நாள். இதனை தனது வீட்டில் எளிமையாக கொண்டாடினார் ஓவியா. இதில் ஓவியாவின் நெருக்கமான நண்பர்கள் மட்டும் கலந்துக் கொண்டனர். அந்த வகையில் ஆரவும் பங்கேற்றார்.
மேலும் ஆரவ் ஓவியாவிற்கு மிக பிடித்த பீகள் வகை நாயை பரிசளித்துள்ளார். இதனால் ஓவியா செம்ம மகிழ்ச்சியில் உள்ளாராம். மேலும் ஆரவ், ஓவியா கேக் ஊட்டியும் கொண்டனர்.
இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அந்த போட்டோக்களில் ஆரவ் மற்றும் ஓவியாவின் நெருக்கத்தை கண்ட கோலிவுட் வட்டாராங்கள் இருவரும் காதலர்களா, நண்பர்களா என சந்தேகப் பேச்சை தொடங்கியுள்ளனர்.