செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் என்.ஜி.கே
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் என்.ஜி.கே. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய சூர்யா, இப்படம் காலதாமதம் ஆனதற்கு என்ன காரணம் என்று விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில் சூர்யா பேசும்போது, செல்வராகவன் இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன். இப்படம் காலதாமதம் ஆனதற்கு பலரும் பல காரணம் சொல்கிறார்கள்.
ஆனால் உண்மையான காரணம், இப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதேபோல் செல்வராகவனுக்கும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் மற்ற நடிகர்களின் கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டது. என்னைப் பொறுத்தவரை, இந்தப் படம் அதற்கு தேவையான காலகட்டத்தை எடுத்துக் கொண்டது என்றார்.