தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் 2006ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் 2006ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின் நடிப்பதில் ஜோதிகா ஒதுங்கியே இருந்தார். அதன் பின் சில ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவருமே விளையாட்டில் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள்.
மகள் தியா கால்பந்து, டென்னிஸ், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகிறார். அதே போல மகன் தேவ்விற்கு தற்காப்பு கலையான கராத்தேவில் ஆர்வம் உள்ளது. கராத்தே சம்பந்தமான பல போட்டிகளில் தேவ் பங்கேற்றுள்ளார். அதற்கு சூர்யாவும் ஊக்கம் அளித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்து கொண்ட சூர்யா மகன் தேவ் வெற்றி பெற்றுள்ளார். தனது மகன் கலந்து கொண்ட இந்த போட்டியைக் காண சூர்யா, ஜோதிகா இருவரும் நேரில் சென்றிருந்தனர்.