ரஜினி தனித்துப் போட்டி! சகோதரர் பேட்டி!!

ரஜினி தனித்துப் போட்டி! சகோதரர் பேட்டி!!

தேர்தல் முடிவுகள் வரட்டும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறார். அதனால் நிச்சயமாக வருவார் என்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சகோதரர்  சத்யநாராயண ராவ், பிள்ளையார்பட்டியில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அதில், வரும் சட்டமன்றத் தேர்தல்தான் ரஜினியின் இலக்கு. வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட ரஜினி முடிவு செய்துள்ளார்.

தற்போது நடந்துவரும் மக்களவைத் தேர்தல் அவருக்கு அனுபவமாக இருக்கும். தேர்தலில் யார் யார் நிற்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்று கவனித்து வருகிறார். தேர்தல் முடிவுகள் வரட்டும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறார். அதனால் நிச்சயமாக வருவார் என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com