பிரைட் ஆஃப் இந்தியன் சினிமா என்ற ஹேஷ்டேக்கைஉருவாக்கி சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்

பிரைட் ஆஃப் இந்தியன் சினிமா என்ற   ஹேஷ்டேக்கைஉருவாக்கி சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராகச் சேர நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . 

2022 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது .அந்த வகையில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியா சார்பாக நடிகர் சூர்யா அழைக்கப்பட்டுள்ளார் .

இதனையடுத்து முதல் ஆஸ்கர் குழுவில் உறுப்பினராகவிருக்கும் முதல் தென் இந்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெற்றுள்ளார் . மேலும் அவருடன் ஹிந்தி நடிகை கஜோலுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது .

இதனை தொடர்ந்து இந்திய சார்பில் இயக்குநர் பிரிவில் பான் நலின் , ஆவணப்படங்கள் பிரிவில் சுமித் கோஷ் மற்றும் ரின்டு தாமஸ் என்பவருக்கும்  , எழுத்தாளர் பிரிவில் ரீமா காக்டி என்பவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .

இதனையடுத்து  பிரைட் ஆஃப்  இந்தியன் சினிமா என்ற  ஹேஷ்டேக்கை உருவாக்கி சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன .மேலும் , கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .

Find Us Hereஇங்கே தேடவும்