மீனாவின் கணவர் கொரொனாவால் உயிரிழந்தார்!

மீனாவின் கணவர் கொரொனாவால் உயிரிழந்தார்!

பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரொனா பாதிப்பின் காரணாமாக நேற்று சென்னையில் உயிரிழந்தார்!

தென்னிந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவர் மீனா துரைராஜ், இவரை மீனா என்றே எல்லோருக்கும் தெரியும். நேற்று இரவு இவரின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னையில் உயிரழந்தார் எனத் தகவல்கள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் திரையுலகினரும் தங்களது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் அவருக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வு பலரையும் வருத்தத்தில்  ஆழ்த்தியுள்ளது.

பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி,  நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சமீபத்தில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டு பின்னர் நுரையீரல் தொடர்பான நோய்களால் காலமானதாகக் கூறப்படுகிறது.

ஏராளமான ரசிகர்கள் மற்றும் பிரபல கலைஞர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் ஆர் சரத் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்தார், “நடிகர் மீனாவின் கணவர் வித்யாசாகரின் அகால மரணம் குறித்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது, மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று அவர் எழுதினார்.

Find Us Hereஇங்கே தேடவும்