இயக்குநர் மிஷ்கின் எடுக்கும் புதிய அவதாரம் - வெளியாகும் மாஸ் தகவல்

 இயக்குநர் மிஷ்கின் எடுக்கும் புதிய அவதாரம் - வெளியாகும் மாஸ் தகவல்

இயக்குனர் மிஷ்கின் முதல் முறையாக தானே இசையமைக்கும் ‘டெவில்’ படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், ‘சவரக்கத்தி’ படத்தின் இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘டெவில்’. இந்தப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாப்பாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் மேலும் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.

‘மாறா’, ‘குதிரைவால்’ போன்ற திரைப்படங்களில் ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். ‘வால்டர்’, ‘செல்ஃபி’ ஆகிய படங்களைத் தொகுத்த எஸ்.இளையராஜா இந்த படத்தின் படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக உள்ள மிஷ்கின் முதன்முறையாக  ‘டெவில்’ படத்தின் மூலமாக  இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

மிஷ்கின் இதற்கு முன் பல பாடல்கள் எழுதியும் பாடியும் உள்ளார். தற்போது ‘டெவில்’ திரைப்படத்தில் நான்கு பாடல்கள் தற்போது வரை இசையமைத்து கொடுத்துள்ளார். விரைவில் இந்தப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்