எங்கள் குழந்தை... விரைவில் வருகிறது - குட் நியூஸ் வெளியிட்ட நடிகை ஆலியா பட்

எங்கள் குழந்தை... விரைவில் வருகிறது - குட் நியூஸ் வெளியிட்ட நடிகை ஆலியா பட்

நடிகை ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

நடிகை ஆலியா பட் இன்ஸ்டாகிராமில் தன் கணவர் நடிகர் ரன்பீர் கபூருடன் தனது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார் எனப்  புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். 

அவர் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களைப் பகிர்ந்துகொண்டு, "எங்கள் குழந்தை... விரைவில் வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ரன்பீரின் சகோதரி ரித்திமா கபூர் சாஹ்னியும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "என் குழந்தைகளுக்கு குழந்தை பிறக்கிறது. நான் உங்கள் இருவரையும் மிகவும் நேசிக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஆலியா மற்றும் ரன்பீர் இந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

Find Us Hereஇங்கே தேடவும்