சினிமா
மதுரை மீனாட்சி கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்...!
மதுரை மீனாட்சி கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்...!
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம் செய்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம் செய்துள்ளார்.
தமிழில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தனது 80வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு சென்னை மற்றும் கோவையில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மதுரையில் இசையென்றால் இளையராஜா எனும் நிகழ்ச்சி ஒத்தக்கடை பகுதியில் நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை வந்த இளையராஜா பக்தர்களோடு பக்தராக நின்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் சுவாமி மற்றும் அம்மன் சன்னதி, கால பைரவர் சன்னதி என மொத்தமாக 45 நிமிடங்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.