புதுப்பேட்டை 2-ஆம் பாகம் திரைப்படம் விரைவில் தொடங்கும்

புதுப்பேட்டை 2-ஆம் பாகம்  திரைப்படம் விரைவில் தொடங்கும்

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை திரைப்படத்தின் 2-ஆம் பாகம் விரைவில் தொடங்கும் என செல்வராகவன் தெரிவித்துள்ளார் . 

காதல் கொண்டேன் , மயக்கம் என்ன , புதுப்பேட்டை முதலான படங்களை இயக்கியவர் செல்வராகவன் . தற்போது அவர் தனுஷை வைத்து " நானே வருகிறேன் " படத்தை இயக்கியுள்ளார். வருகிற செப்டம்பர் மாதம் அந்த வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

"ஆயிரத்தில் ஒருவன் " படத்திற்கு அடுத்து செல்வராகவனிடம் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது புதுப்பேட்டை ஆகும் . 2006 -ஆம் ஆண்டு புதுப்பேட்டைப் படம் வெளியானது . இதில் தனுஷ் கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இது ஒரு ரவுடியின் நிஜ வாழ்க்கையைக் கதையின் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது . 

தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட செல்வராகவனிடத்தில் புதுப்பேட்டை 2 ஆம் பாம் படம் எப்போது என்று   கேட்ட கேள்விக்கு அவர்  "ஆயிரத்தில் ஒருவன் 2" படத்துக்கு  முன்பாக தொடங்கும் என்று அவர் பதில் அளித்துள்ளார் . 

அதோடு ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகம் படம் 2024-இல் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது . அதன் பிறகு "புதுப்பேட்டை 2" படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என செல்வராகவன் கூறியுள்ளார் .இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகப்பெரிய நெகிழ்வை தந்துள்ளது . 

Find Us Hereஇங்கே தேடவும்